வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (13:31 IST)

குளிக்க போன மனுஷன.. கொரோனா பயத்தில் போட்டு தள்ளிய வடகொரிய அரசு!!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு உள்ளதா என சந்தேகிக்கப்பட்ட நபரை சுட்டுக்கொன்றுள்ளது அரசு தரப்பு. 
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை கொடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் 60,400 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், வடகொரியா நாட்டை சேர்ந்த வர்த்தக அதிகாரி ஒருவர் சமீபத்தில் சீனாவுக்கு சென்று நாடு திரும்பினார். எனவே அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என அஞ்சி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார். 
 
ஆனால் அந்த ந்பார் பொது இடத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்றதால் அவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பிறருக்கு பரவி விடும் என அஞ்சி,   உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி உடனடியாக அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.