1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2017 (05:43 IST)

மலேசிய தூதர் திடீர் வெளியேற்றம். வடகொரிய அதிபர் அதிரடி

கடந்த மாதம் 13ஆம் தேதி மலேசியாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் சகோதரர் கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மலேசிய அரசு விசாரணை செய்து ஒருசிலரை கைது செய்துள்ளது. இருப்பினும் இந்த கொலை சம்பவம் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று மலேசிய விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





 


இந்நிலையில் மலேசிய அரசின் விசாரணை குறித்து மலேசியாவில் உள்ள வடகொரிய தூதர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மலேசிய அரசு உடனடியாக அவர் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக  வடகொரிய அரசும் மலேசிய தூதரை வடகொரியாவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை வெளியேற்றியது இருநாட்டு நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளதாக உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன