திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 மே 2021 (10:48 IST)

எங்களை எதிர்த்தா மோசமான விளைவுகளை சந்திக்கணும்! – அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை!

அமெரிக்கா – வடகொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் வடகொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை சோதித்து வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னதாக ட்ரம்ப் ஆட்சியில் வடகொரியாவுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக சூழல் எட்டப்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய புதிய அதிபர் ஜோ பிடன் ஈரான் மற்றும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை சரி வராத பட்சத்தில் புதிய நடவடிக்கைகள், முறைகள் கையாளப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜோ பிடனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா “அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான தங்கள் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.