1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

நிலக்கரி வாங்க பணமில்லை: இலங்கையில் 7 மணி நேரம் மின்வெட்டு

நிலக்கரி வாங்க பணம் இல்லை என்பதால் இலங்கையில் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தலைநகர் கொழும்பு உட்பட பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கி இருப்பதாகவும் நிலக்கரி வாங்கக்கூட பணம் இல்லாததால் இலங்கை அரசு பெரும் சிக்கலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே ஒரு கிலோ அரிசி 250 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் 250 ரூபாய் ஒரு முட்டை 35 ரூபாய் என இலங்கையில் விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்களால் நாட்டிலிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றனர்
 
இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி மற்றும் அன்னிய செலவாணி மதிப்பு குறைந்தது இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக கூறப்படுகிறது