திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (16:54 IST)

துருக்கி பூகம்பத்தில் இந்தியர்களுக்கு பாதிப்பா? தூதர் தகவல்

turkey
துருக்கி மற்றும் சிரியா பூகம்பத்தில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என துருக்கிக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். 
 
துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் கலந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக சுமார் 25 ஆயிரம் பேர் உயிர் இழந்த உள்ளனர். இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்ட நிலையில் துருக்கியில் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த சிலரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் துருக்கியில் சுமார் 3000 இந்தியர்கள் உள்ளனர் என்றும் ஆனால் அவர்கள் நிலநடுக்கம் பாதித்த பகுதியில் இல்லை என்றும் தற்போது வந்துள்ள தகவல் என்பதை துருக்கியில் இந்தியர் யாரும் சிக்கிக் கொள்ளவில்லை என்றும் இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை விறுவிறுப்பாக மீட்பு பணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran