1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:20 IST)

10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை புதைத்த அரசு… இதுதான் காரணமாம்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவுக்கு உலக நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர்.

உலகின் வறுமை அதிகம் உள்ள நாடுகளுக்கு மற்ற நாடுகள் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். அப்படி ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நைஜீரியா நாட்டுக்கு வழங்கப்பட்ட லட்சக்கணக்கான தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்துவதற்கு அவர்களிடம் போதுமான மருத்துவக் கட்டமைப்பு வசத் இல்லாததால் ஊசிகள் எல்லாம் காலாவதி ஆகியுள்ளன.

இதையடுத்து காலாவதியான 10.6 லட்சம் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் ஊசிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு அரசில் சார்பில் தெரிவித்த தகவலில் ‘தடுப்பூசி குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணம் பரவி வருவதால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.