முஸ்லிம்களை முழுமையாக தடை செய்ய டிரம்ப் புதிய ஆணை!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (12:06 IST)
சிரியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் வகைடில் புதிய ஆணையை பிறப்பிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

 
 
சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் ஆணையை டிரம்ப் அண்மையில் பிறப்பித்தார்.
 
இந்த தடை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் குறிப்பிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய ஆணையை பிறப்பிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என தெரிகிறது.
 
அதிபர் டிரம்ப் அகதிகளை ஏற்க மறுப்பதால் கனடாவில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :