1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (06:43 IST)

இரண்டாக பிளக்கப்பட்ட கர்ப்பிணி பெண்: லிஃப்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் லிப்ட்டில் ஸ்ட்ரெச்சரோடு நுழைக்கப்பட்டபோது திடீரென லிப்ட் எழும்பியதால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

 
 
ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய் இருவரையும் வேறு வார்டுக்கு மாற்ற ஸ்டிரெச்சரோடு லிஃப்டுக்கு மருத்துவனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.
 
அப்போது ஸ்ட்ரெச்சர் உள்ளே நுழையும் முன்பே லிஃப்ட் திடீரென இயங்கியது. இதனால் ஸ்டிரெச்சரில் இருந்த அந்த பெண் இரண்டாக பிளக்கப்பட்டார். நல்லவேளையாக குழந்தை தப்பித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.