திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (13:03 IST)

நேபாள பிரதமரின் மனைவி மாரடைப்பால் காலமானார்

Prime Minister Pushpa Kamal wife sita
நேபாள பிரதமர் புஷ்ப கமல் மனைவி இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

நேபாள நாட்டின் பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். இவர் பல ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் இதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், காத்மாண்டு  நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில்  பார்கின்சன் வகையைச் சேர்ந்த ஒரு நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரதமரின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்தாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் கூறி வருகின்றனர்.