செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (08:44 IST)

திடீரென வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்! – நைஜீரியாவில் பயங்கரம்!

நைஜீரியாவில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள நைஜர் பகுதியில் எண்ணெய் வயல் உள்ளது. அங்கு ஷேபா ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் எண்ணெய் கப்பல் ஒன்று எண்ணெய்யை எடுக்க வந்துள்ளது.

அப்போது எதிர்பாராமல் கப்பலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென கப்பல் கடலில் வெடித்து சிதறியது. கப்பலில் பணியாற்றி வந்த 20க்கும் மேற்பட்டோரில் நிலமை என்ன என்பது குறித்து தெரியவில்லை. மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் துறைமுக கரையில் இருந்த சிலர் கப்பல் வெடித்த சம்பவத்தை வீடியோ எடுத்த நிலையில் அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.