Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பூமியை ஏலியன்ஸிடம் இருந்து பாதுகாக்க முன்வந்த 4ஆம் வகுப்பு மாணவன்

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (18:24 IST)

Widgets Magazine

பூமியை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணபித்த 4ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு நாசா பதிலளித்துள்ளது.


 

 
பூமியை வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பாதுகாக்கும் அதிகாரியை நாசா நியமிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் நியூ ஜெர்சியை சேர்ந்த ஜேக் டேவிஸ் என்ற சிறுவன் பூமியை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணபித்துள்ள சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதற்கு நாசா அந்த சிறுவனுக்கு பதிலளித்துள்ளது. அதை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
சிறுவன் விண்ணப்பித்த கடிதத்தில்,
 
என் பெயர் ஜேக் டேவிஸ், என் சகோதரி என்னை ஏலியன் என்று அழைப்பார். பூமியின் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு வயது வேண்டுமானால் 9 இருக்கலாம் ஆனால், இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என எழுதி நாசாவிற்கு அனுப்பியுள்ளான்.
 
இதற்கு நாசா எழுதிய பதில் கடிதத்தில், டியர் ஜேக், உன் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். இந்த பதவி மிகவும் முக்கியமானது. சந்திரன், விண்கற்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து சில மாதிரிகள் மீண்டும் கொண்டு வரும்போது, சிறிய நுண்ணுயிரிகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பது அவசியம். இதற்கு நாங்கள் கைதேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நியமிக்க உள்ளோம். 
 
நீங்கள் இப்போது தான் பள்ளியில் படித்து வருகிறீர்கள். நன்றாக படியுங்கள். வருங்காலத்தில் ஒரு நாள் கண்டிப்பாக உங்களை நாசாவில் சந்திப்பேன் என நம்புகிறேன் என பதிலளித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த அதிமுக பிரமுகர் ; பொதுமக்கள் உன்ணாவிரதம் (வீடியோ)

கரூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் ஆளுங்கட்சி பிரமுகரை கண்டித்து ஊர் ...

news

மாடல் அழகியை கடத்தி ஆன்லைனில் ஏலம் விட முயற்சித்த நபர் கைது

இத்தாலியில் மாடல் அழகியை கடத்தி இணையதளம் மூலம் ஏலம் விட திட்டமிட்ட நபரை காவல்துறையினர் ...

news

காதல் திருமணம் செய்த மகள் - குடும்பத்தில் 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை

தங்களை மீறி மகள் திருமணம் செய்து கொண்டதால் விரக்தி அடைந்த குடும்பத்தினர் விஷம் அருந்தி ...

news

20 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்து

பாகிஸ்தான் அமைச்சரவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக ...

Widgets Magazine Widgets Magazine