1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (13:43 IST)

எட்டு மாத கால பயணம்; செவ்வாயை நெருங்கியது பெர்சவரென்ஸ்! – தீவிர எதிர்பார்ப்பில் விஞ்ஞானிகள்!

செவ்வாய் கிரகத்தில் உள்ள மாதிரிகளை சேகரிக்க நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ள நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக சில ரோவர்கள் அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்த நிலையில் அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வர நாசா திட்டமிட்டது.

இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது கடந்த 8 மாத காலமாக விண்வெளி பயணம் மேற்கொண்ட பெர்சவரன்ஸ் இன்று செவ்வாயின் வெளிவட்ட பாதையை அடைந்துள்ளது. நாளை பெர்சவரன்ஸ் செவ்வாயில் தரையிரங்க உள்ள நிலையில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளால் இந்த சம்பவம் உற்று நோக்கப்படுகிறது.