1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (12:07 IST)

இலங்கை தமிழ் அகதிகளுக்கு சிறப்பு திட்டங்கள்: முதல்வரின் அறிவிப்புக்கு இலங்கை பிரதமர் மகனின் டுவிட்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் இலங்கை தமிழருக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்தார் என்பதும் அந்தத் திட்டங்கள் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு 300 சுய உதவி குழுக்கள் மூலம் நிதி உதவி செய்யப்படும் என்றும் இலங்கை தமிழர்களின் பழுதடைந்த வீடுகளை புதிதாக கட்டித் தருவோம் என்றும் இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த அறிவிப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குறித்து வந்தது என்பதும் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இலங்கை அரசியல் தலைவர்களும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகன்  மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் இலங்கை அமைச்சருமான நமல் ராஜபக்சே தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பிய ஆயிரக்கணக்கான குடும்பங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வரவேற்றார் என்பதும் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்