ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (16:21 IST)

ஒசாமா பின்லேடன்தான் எங்கள் ஹீரோ! – முஷ்ரப் பேசிய வீடியோ!

ஒசாமா பின்லேடன்தான் எங்கள் ஹீரோ என முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷ்ரப் பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில் அவர் ”ரஷ்யாவை நாட்டிலிருந்து வெளியேற்ற நாங்கள் உலகம் முழுவதிலும் இருந்து முஜாகிதீன்களை அழைத்து வந்து பயிற்சியளிதோம். தலிபான்களுக்கு பயிற்சியளித்தோம். ஒசாமா பின்லேடன், ஹபீஸ் சயித் ஆகியோர் எங்களது ஹீரோக்கள். காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வந்தவர்களை நாங்கள் ஆதரித்து பயிற்சியளித்தோம். ஆனால் ஒருநாள் எங்களது ஹீரோக்கள் உலகத்தின் பார்வையில் வில்லனாக ஆகி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், முஷரப் இப்படி பேசியுள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.