1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (17:49 IST)

பல கோடி ரூபாய் மோசடி வழக்கு : பாக்., முன்னாள் பிரதமர் கைது ?

பாகிஸ்தான் நாட்டில்  பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ‘தெரீக் இ இன்சாப் ’ கட்சியின்  ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால் இம்ரான் கான் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சர்க்கரை ஆலையில் நடைபெற்ற மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் செரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ்  ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் , சவுத்ரி சக்கரை ஆலையின் பங்குகளை விற்பது மற்றும் வாங்குவதில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நவாஸின் மகள் அவரது உறவினர் அப்பாஸ் ஆகியோர் மீது பலகோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக தக்க ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் இந்த ஊழல் வழக்கு சம்பந்தமாக அவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் 15 நாட்கள்  அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. 
 
இதுகுறித்து நவாஸின் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட  வழக்கறிஞர் இந்த வழக்கு போலியானது என கூறினார். ஆனால் நீதிபதிகள் அவரது வாதத்தைக் கேட்காமல் நாவஸை நீதிமன்றத்தில் ஆஜராககுமாறு கூறி உத்தரவிட்டார். இந்த வழக்கு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.