திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (13:50 IST)

3 மாத கைக்குழந்தையை ரயில்வே ஸ்டேஷனில் விட்டு சென்ற தாய்..! 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..!

மூன்று மாத கைக்குழந்தையை ரயில்வே ஸ்டேஷனில் விட்டு சென்ற பெண்ணை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து உள்ள சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காட்பாடி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையை மூதாட்டி ஒருவரிடம் ம் விட்டு விட்டு சென்ற சிசிடிவி காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவது ஒரு குழந்தை பிறந்ததாகவும் வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாததால் அந்த குழந்தையை காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து ஒரு மூதாட்டி இடம் கொடுத்துவிட்டு சென்றதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 24 மணி நேரத்தில் குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணையும் அவரது கணவரையும் கண்டுபிடித்தனர் 
 
தற்போது அந்த கைக்குழந்தை குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva