திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (06:48 IST)

6 கோடியை கடந்தது உலக கொரோனா பாதிப்பு!

உலக கொரோனா பாதிப்பு 6 கோடியை முதல்முறையாக கடந்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 6 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 60,086,831 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,413,778 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 41,537,922 பேர்
மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 17,135,131 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,954,671 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 265,889 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,632,808 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,221,998 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 134,743 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,641,404 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,121,449 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 170,179 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,476,018 என்பதும் குறிப்பிடத்தக்கது.