வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 மே 2020 (08:07 IST)

37 லட்சத்தை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் மேலும் அதிகரிப்பு

சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் மனித இனத்தையே ஆட்டுவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக இருந்து வரும் நிலையில் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 37,24,344ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,58,013ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இன்னொருபுறம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 12,39,900 பேர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் உலகில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் தான். இந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,335 பேர் பலியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து அந்நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 72,256ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 1,237,633 பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 250,561 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 213,013 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 194,990 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டில் 170,551 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 167,007 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 155,370 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது