1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (17:45 IST)

துருபிடிக்கும் சந்திரன்; ஒளியை இழக்குமா? – வியப்பில் விஞ்ஞானிகள்!

வளிமண்டலம் அற்ற சந்திரனின் மேற்பகுதியில் துருபிடிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது அவர்களுக்கே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக செவ்வாய் கோளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அங்கு வீசும் புழுதி புயல்களாலும், படிகங்கள் மீது படரும் மாசுக்களாலும் செவ்வாய் கோள் துருபிடிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வளிமண்டலம் இல்லாத நிலையிலும் கூட சந்திரன் துருபிடிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹவாய் பல்கலைகழக வானியல் நிபுணர்கள் சோதனை செய்ததில் சந்திரனில் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் இரும்பு தாதுக்கள் அதிகம் இருப்பதாகவும், அதனுடன் வேறு சில தாதுக்கள் மோதுவதாலும், கலப்பதாலும் இவ்வாறான துரு உருவாவதாக கூறியுள்ளனர். மேலும் இதனால் சந்திரன் ஒளி மங்குவதற்கு வாய்ப்பில்லை என்றும், வழக்கமான பிரகாசத்துடன் நிலவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.