ஆற்றில் விழுந்தவருக்கு...கை கொடுத்து உதவ முயற்சித்த குரங்கு !

orangutton
sinoj kiyan| Last Modified சனி, 8 பிப்ரவரி 2020 (16:21 IST)
Monkey trying to help human
தெற்காசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இடமாக உள்ள போர்னியோ காடுகளுக்குச் சென்ற ஊழியர் ஒருவர் ஆற்றில் இருப்பதைப் பார்த்து, ஓராங்குட்டான் குரங்கு அவருக்கு கை தூக்க முயற்சிக்கும் ஒரு
புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இன்றைய காலத்தில் மனிதனே மனிதனுக்கு உதவி செய்ய மறுத்து வரும் சூழலில் இந்த குரங்கின் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தெற்காசியாவில் உள்ள போர்னியோ காடுகளில் ஒரு ஆற்றில் இறங்கிய ஊழியர் ஒருவர் பாம்புகளை தேடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை சிறுது நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஓரங்குட்டான் குரங்கு, அவர் ஆற்றில் விழுந்து கரையேற முடியாமல் தவித்து வருவதாக நினைத்து அவருக்கு கை கொடுத்து மேலே வர உதவ முயற்சித்துள்ளது.

இந்த புகைப்படத்தை அனில் பிரபாகர் என்பவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :