வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (12:36 IST)

துபாயில் நகரின் சாலையில் பறந்த பணம்; அள்ளிய பொதுமக்கள்

துபாயில் நகரின் சலையில் பணம் பறந்ததால், வாகனங்களில் சென்றவர்களும், பொதுமக்களும் அள்ளிச் சென்றனர்.
 
துபாயின், ஜூமைரா பகுதியிலுள்ள பிரதான சாலையில், திடீரென சூறாவளி காற்று வீசியுள்ளது. இந்த காற்றில் 500 திர்ஹாம் மதிப்பு கொண்ட ஆயிரக்கணக்கான நோட்டுக்கள் சாலையில் பறந்து வந்து விழுந்தன.

 
அப்போது சாலையில் வந்துக்கொண்டிருந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு பணத்தை அள்ளத் தொடங்கினர். ஏராளமானோர் தங்கள் கை நிறைய பணத்தை அள்ளிக்கொண்டு சென்றனர்.
 
ஆனால், இந்த பணம் எங்கிருந்து வந்தது, அது யாருடையது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏறத்தாழ 2 முதல் 3 மில்லியன் திர்ஹாம் தொகை காற்றில் பறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.