செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (11:53 IST)

மலேசிய பிரதமரை சந்தித்தார் மோடி

அரசு முறை பயணமாக மலேசியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் மகாதீர் முகம்மதுவை இன்று சந்தித்து பேசியுள்ளார்.
 
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக முதல் முறையாக இந்தோனேசியா சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
 
இதைத்தொடர்ந்து, மோடி மலேசியாவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் மகாதீர் முகம்மதுவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் இருநாடுகளின் உறவுகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து, பிரதமர் மோடி ஜூன் 1ம் தேதி சிங்கப்பூரில் நடக்கவுள்ள ஒரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.