வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 12 ஜூலை 2017 (18:01 IST)

சேர மன்னன் வழங்கிய செப்புப் பட்டயத்தை இஸ்ரேல் பிரதமருக்கு பரிசளித்த மோடி

சேர மன்னன் யூதர்களின் தலைவன் ஜோசப் ராபனுக்கு வழங்கிய செப்புப் பட்டயங்களை பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருக்கு பரிசளித்தார்.


 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் இருநாட்டு தலைவர்களின் நட்பு உறவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்தது. இஸ்ரேல் நாடு இந்தியாவுக்கு உயர் ரக ஆளில்லா போர் விமனங்களை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
 
இதையடுத்து மோடி இஸ்ரேல் பிரதமருக்கு 2 செப்பு தகடுகளை பரிசளித்துள்ளார். முதல் செப்பு தகடு சேர மன்னன் மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமானால் யூதர்களின் தலைவன் ஜோசப் ராபனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது செப்பு தகடு சேர நாட்டுடன் யூதர்களுக்கு இருந்த வர்த்தக தொடர்புகள் பற்றியது. 
 
அப்போதே சேர நாட்டவர்கள் யூதர்களுடன் விரிவான வர்த்தக தொடர்பில் இருந்துள்ளனர். யூதர்களின் தலைவனான ஜோசப் ராபன் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஷிங்க்லி என்ற பகுதியில் இளவரசராக இருந்துள்ளார். இந்த ஷிங்க்லி பகுதி யூதர்களின் இரண்டாம் ஜெருசலேம் என்று அழைக்கப்படுகிறது.