வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2016 (15:54 IST)

கடலில் ஏவுகணைகளை குவிப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் கதை கட்டுகின்றன: சீனா குற்றச்சாட்டு

தென் சீனக் கடலில் ஏவுகணைகளை குவிப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் கதை கட்டுவதாக சீனா குற்றம் சாற்றியுள்ளது.


 

 
தென் சீனக் கடல் பகுதியில் சீனா தனது உரிமையை நிலைநாட்ட முயல்வதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாற்றி வருகின்றன.
 
சீனா 8 ஏவுகணைகளையும், மற்றும் ரேடார் அமைப்புகளையும் உட்டி தீவுகளில் குவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
இந்நிலையில், இந்த செய்திகளை மறுத்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ, "இதைப்போன்ற தவறான தகவல்களை பரப்புவதை மேற்கத்திய ஊடகங்கள் கைவிட வேண்டும். 
 
இத்தகு கட்டுக் கதைகளை வெளியிடுவதை தவிர்த்து, தென் சீனக் கடல் பகுதியில் சீனா அமைத்துவரும் கலங்கரை விளக்கங்கள் போன்ற ஆக்கப்பூர்வமான செய்திகளை வெளியிடுவதில் அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 
சோஷலிசப் பொருளாதார அமைப்பை அடிப்படையாகக் கொண்ட சீனா, அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது.
 
இதைக் கண்டு அச்சமும் பீதியும் அடைந்துள்ள முதலாளித்துவ பெருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள மேற்கத்திய நாடுகள் சீனாவின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.