1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 16 மார்ச் 2016 (12:16 IST)

ராணுவ ரகசியங்களை திருட முயன்ற அமெரிக்க மாணவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்த வடகொரியா

வடகொரியாவில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஓட்டோ பிரடெரிக் வாம்பியர்.
 
21 வயதுடைய இவர் கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் வடகொரியா நாட்டிற்குச் சென்றார்.
 
அவர் அந்நாட்டின் தலைநகரன பியாங் யாங் நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து, அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை திருடினார்.
 
இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அவர் வடகொரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
 
அத்துடன், ரகசியங்களை திருடும் திட்டத்தோடு, மாணவர் சுற்றுலா என்ற பெயரில் பியாங் யாங் நகருக்கு வந்ததாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
 
இதைத் தொடர்ந்து, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு வடகொரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அமெரிக்க மாணவர் ஓட்டோ பிரடெரிக் வாம்பியருக்கு கடின உழைப்புடன் கூடிய 15 ஆண்டு சிறை சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
சோஷலிச நாடாகிய வட கொரியாவின் ராணுவ ரகசியங்களை திருட அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவாறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.