வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (22:08 IST)

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து…3 வீரர்கள் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டபோது, ராணுவத்திற்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்க நாட்டில் அலாஸ்ககா மாகாணம் ஹூலி என்ற  பகுதியில் நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

2 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வானில் பறந்துகொண்டிருக்கும்போது,  2 ஹெலிகாப்டர்களும் திடீரென்று நேருக்கு நேர் மோதி கீழே விழுந்தது.

இந்த விபதில், 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு வீரனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றொரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.