1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (12:50 IST)

இந்திய எல்லையில் 60 ஆயிரம் சீன வீரர்கள்! – மைக் பாம்பியோ எச்சரிக்கை!

இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சீனா அத்துமீறி 60 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளதாக மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்

இந்திய – சீன எல்லைபகுதியான லடாக்கில் சில மாதங்கள் முன்னதாக இருநாட்டு படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன ராணுவம் அடிக்கடி எல்லையில் அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் குவாட் க்ரூப் என்னும் இந்தோ – பசிபிக் நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டம் முடிந்த பிறகு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்திய எல்லையில் சீனா 60 ஆயிரம் வீரர்களை அத்துமீறி நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சீனாவின் அண்டை நாடுகளுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.