1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 18 ஜூலை 2014 (10:52 IST)

18, 000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்: அதிர்ச்சித் தகவல்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 18, 000 பேரை வேலையிலிருந்து அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 2015 ஆம் ஆண்டுக்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18, 000 பேரை நீக்க முடிவு செய்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்நிறுவனத்துக்கு சமீபத்தில் கைமாறிய நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் 12, 500 ஊழியர்களுக்கு வேலை நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாடெல்லா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உற்பத்தி மற்றும் அவசியத்தைக் கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும், ஆறு மாதங்களில் படிப்படியாக இந்த ஊழியர்கள் தங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மைக்ராசாப்ட் நிறுவனத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நாடெல்லா கூறியிருக்கும் அதிர்ச்சித் தகவல் குறிப்பிடத்தக்கது.