கைப்பிடித்த ட்ரம்ப்; தட்டிவிட்ட மனைவி..... வைரல் வீடியோ


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 26 மே 2017 (16:19 IST)
இஸ்ரேல் நாட்டு விமான நிலையத்தில் கை கொடுக்க விரும்பிய ட்ரம்ப் கையை அவரது மனைவி மெலானியா தட்டிவிடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

 
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இஸ்ரேல் நாட்டுக்கு அவரது மனைவி மெலானியாவுடன் சென்றார். விமான நிலையத்தில் விமானத்தை விட்டு இறங்கி செல்லும்போது மனைவியை கைபிடித்து அழைத்துச் செல்ல கை கொடுத்தார்.
 
ஆனால் மெலானியா அவரது கையை தட்டிவிட்டார். இந்த வீடியோ தற்போது அமெரிக்காவில் வைரலாக பரவி வருகிறது. ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற நாளில் இருந்து ஒபாமா அவரது மனைவிக்கு மரியாதை கொடுக்கும் விதத்தையும், ட்ரம்ப் அவரது மனைவியிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் ஒப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வந்தனர்.
 
மேலும் ட்ரம்ப் மனைவி ட்ரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து, மெலானியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வந்து தங்கவே இல்லை. தன்னுடைய நியூயார்க் இல்லத்திலேயே வசித்து வருகிறார்.

 

நன்றி: CSPAN LIVE STREAM

webdunia

இதில் மேலும் படிக்கவும் :