திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (08:12 IST)

இளவரசர் ஹாரிக்கு ஆண்குழந்தை: விழாக்கோலமாகும் பிரிட்டன் அரண்மனை

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், நடிகை மேகன் மார்க்கலினுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரிட்டனே விழாக்கோலமாக காட்சி அளித்து வருகிறது.
 
மேகன் மார்க்கலின் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் நேற்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டன் நேரப்படி 5.26க்கு இந்த குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலம் என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
தனக்கு குழந்தை பிறந்தது குறித்து ஹாரி தனது சமூகவலைத்தளத்தில் கூறியபோது, 'வாழ்க்கையின் அற்புதமான தருணத்தை உணர்வதோடு தாய்மையை போற்றுகின்றேன். இது மெய்சிலிர்க்கும் அனுபவம். மக்களின் அன்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்று தெரிவித்தார்
 
இன்று பிறந்துள்ள குழந்தை பிரிட்டன் மன்னர் வம்சத்தின்  7-வது ஆண் வாரிசு என்பதும், இரண்டாவது ராணி எலிசபெத்தின் 8-வது கொள்ளுப் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது