செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (13:05 IST)

உண்மையை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர்: அதிர்ச்சியில் மக்கள்

பேஸ்புக் பயணாளிகளின் தகவல் திருடப்பட்டதிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.
 
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்காவில் வசிக்கும் 50 மில்லியின் பேஸ்புக் பயணாளிகளின் தகவல்களை திருடி, டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியதாக லண்டனில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அலுவலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
 
இதனால் பேஸ்புக் பயணாளிகள் தங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டதா என்று அச்சம் அடைந்தனர். மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டது.
 
இந்த சர்ச்சை குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,  பேஸ்புக் பயணாளிகளின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான். இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இது போன்ற தவறுகள் இனி நடக்காது என உறுதியளித்தார். மேலும், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற மற்ற நேர்மையற்ற செயலிகள் அனைத்தையும் பேஸ்புக் தணிக்கை செய்யும் என கூறினார்.