விபச்சாரம் செய்த மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவர்..


Murugan| Last Updated: செவ்வாய், 16 மே 2017 (14:45 IST)
தன்னுடைய மனைவியை கொலை செய்து, குக்கரில் சமைத்த கணவர், போலீசார் வந்ததும், தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேண்ட் நகரில் வசிப்பவர் மார்கஸ் வோல்கி(27). இவரின் மனைவி மயாங் பிரசெட்டியோ(23). இவர்கள் இருவரும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
 
மார்க்ஸிற்கு போதிய வருமானம் இல்லாததால், மனைவியை வைத்து விபச்சாரத் தொழிலை செய்ய அவர் முடிவெடுத்தார். இதற்கு பிரசெட்டியோவும் சம்மதம் தெரிவிக்க த சில மாதங்கள், ஆன்லைன் மூலம் அவர்கள் வாடிக்கையாளர்களை பெற்று அந்த தொழிலை செய்து வந்தனர்.


 

 
இந்நிலையில், தன்னுடைய வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது,  வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், அதை சரி செய்யுமாறு, மின்சார நிலையத்தை மார்கஸ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 
 
எனவே, மின்சார ஊழியர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதற்கு நான் பன்றிக்கறி சமைத்துக்கொண்டிருக்கிறேன் என மார்கஸ் கூறியுள்ளார். ஆனாலும், சந்தேகப்பட்ட ஊழியர்கள் மின்சார இணைப்பை சரி செய்து விட்டு, அங்கிருந்து வெளியேறி, இதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
 
உடனடியாக போலீசார் விசாரணை நடத்த அவரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, நீங்கள் பரிசோதனை செய்யுங்கள், இதோ வருகிறேன் என ஒரு அறைக்குள் சென்ற மார்கஸ், கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வீட்டில் சோதனை செய்த போது, அவரின் மனையை கொன்று, அவரின் உடலை வெட்டி, குக்கரில் அவர் சமைத்துக் கொண்டிருந்தார் என்பதைக் கண்டுபிடித்தனர். இது நடந்தது 2014ம் ஆண்டு. 
 
ஆனால், இந்த கொலை ஏன் நடந்தது? மார்கஸ் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் போலீசாருக்கு தெரியாதாதால், இதுபற்றிய தகவலை கடந்த 3 வருடங்களாக போலீசார் வெளியிடவில்லை.
 
தற்போதுதான் கணவன், மனைவிக்கான பிரச்சனையால்தான் இந்த கொலை மற்றும் தற்கொலை நடந்துள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.   

webdunia

இதில் மேலும் படிக்கவும் :