பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்: 3 ஆண்டுகள் சிறை!
பிரிட்டனில் 29 வயதான இளைஞர் ஒருவர் பெண்கள் உடை மாற்றுவது மற்றும் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரிஸ்டல் நகரை சேர்ந்த எட்வர்ட் பார்க்கர் ஆபாச படங்களுக்கு அடிமையானவர். இதன் காரணமாக எட்வர்ட் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளான்.
இதன் மூலம் 27 பெண்கள் நிர்வாணமாக குளிப்பது மற்றும் உடை மாற்றும் வீடியோவை எட்வட்ர்ட் எடுத்ததை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து அவரது வீட்டில் இருந்த கணினியையும் கைப்பற்றினர். அந்த கணினியில் இந்த வீடியோக்களுடன் சேர்ந்து மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளது.
இதனையடுத்து எட்வர்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு நடைபெற்று வந்தது. அதில் எட்வர்ட் மீதான அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு 170 பவுண்ட் பணம் மற்றும் பாலியல் குற்றவாளி பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.