வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2014 (13:29 IST)

மலேரியாவை 2 நாட்களில் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

இரண்டே நாட்களில் மலேரியா நோயைக் குணப்படுத்தும் (+)-LJ733 என்ற மருந்தை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
மலேரியா நோயைக் குணப்படுத்துவதற்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துகள் படிப்படியாக நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.
 
ஆனால் தற்போது அதிநவீன நுட்பத்தில் மற்றும் மூலக்கூறுகளுடன் கூடிய புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு (+)-LJ733 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்து 2 நாளில் மலேரியா நோயைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
 
இந்தப் புதிய மருந்து மலேரியா தாக்கியுள்ள ரத்த சிவப்பு அணுக்களை மட்டும் அழிக்கும். அதே நேரத்தில் சுகாதாரமான மற்ற செல்கள் அழியாமல் பாதுகாக்கும்.
 
(+)-LJ733 மருந்தை மலேரியா நோய் தாக்கிய எலிகளுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் 24 மணி நேரத்தில் 80 சதவீத மலேரியா கிருமிகள் அழிந்து விட்டன.
 
மேலும், 48 மணி நேரத்தில் அக்கிருமிகள் முற்றிலுமாக அழிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தை செலுத்தி பரிசோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.