1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (12:04 IST)

அமேசான் நிறுவனரின் எக்ஸ் மனைவி 20,000 கோடி ரூபாய் நன்கொடை

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்ஸி ஸ்காட் மக்கள் தொண்டுக்காக மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

 
இது தொடர்பாக தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மெக்கென்ஸி ஸ்காட் "நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத" மக்களுக்கு இந்தப் பணத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார். இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதற்கு இனப்பாகுபாட்டுக்கு எதிராகப் பணியாற்றும் 286 அமைப்புகளைத் தேர்வு செய்திருப்பதாகவும் ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட்டும் ஒருவர். அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது அவருக்குக் கிடைத்தது. கடந்த டிசம்பரில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நன்கொடை வழங்கினார்.