ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (11:25 IST)

பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள் : விவசாயிகள் கவலை !

கென்யாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் வந்து பயிரை நாசம் செய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள்  பெரும் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளைப் போன்று நிஜமாலும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து படையெடுத்து வரும் இந்த பூச்சிகள் அங்குள்ள விவசாய நிலங்களை அழித்து வருகின்றது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி குறைவு மற்றும்  வறட்சிப் பிடியில் இருக்கும் இந்த நாடுகளில் விவசாய நிலங்களை வெட்டிக் கிளிகள் அரித்து வருவது அந்நாட்டு மக்களுக்கு உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுமோ என பலரும் கவலை தெரிவித்து உள்ளார்.