1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By VM
Last Updated : திங்கள், 7 ஜனவரி 2019 (15:51 IST)

பாம்புத் தோல் போன்ற லெக்கின்ஸ் அணிந்த மனைவி- உண்மைப் பாம்பு என அடித்து காலை உடைத்த கணவர்

பாம்பு தோல் போன்ற லெக்கின்ஸ் பேண்ட் அணிந்த மனைவியின் காலை, உண்மையான பாம்பு என நினைத்து கணவர் அடித்து நொறுக்கிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.


 
ஆஸ்திரேலியாவில் மெல்போர்னைச் சேர்ந்த பெண் ஒருவர் பாம்பு தோல் போன்றதொரு லெக்கின்ஸ் அணிந்துள்ளார். அந்த உடையியே இருந்து கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருந்துள்ளார். அப்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் அந்த பாம்பு லெக்கின்ஸ் உடையுடனே தூங்கிவிட்டார. இரவில் வீட்டுக்கு வந்த கணவர், தன் மனைவியின் காலுக்கு அடியில் இரண்டு பாம்புகள் ஊறுவதாக நினைத்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். வலியால் மனைவி அலறவே, அவர் பாம்பை கண்டுதான் அலறுவதாக எண்ணி மீண்டும் தாக்கியுள்ளார். இறுதியில் பாம்பு போன்ற  லெக்கின்ஸ் என்பது தெரியவந்ததும், மனைவியை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.