வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (15:47 IST)

பறந்து வந்து வெடித்த லாவா பாம்: 23 பேருக்கு தீக்காயம்!

மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் அமெரிக்க மாநிலமான ஹவாய் தீவில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து எரிமலை வெடிப்பு நிகழ்ந்து வருகிறது. கிலாயூ என்ற எரிமலை மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 13 முறை வெடித்துள்ளது. 
 
அதில் இருந்து கியாஸ், பாறைகள், நெருப்பு குழம்பு வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு அங்கு எரிந்து நாசமாகி உள்ளது. இதனால் 70 சதவீத மக்கள் ஏற்கனவே தீவை காலி செய்துவிட்டார்கள்.
 
ஆனால், இவை அனைத்தையும் கண்டுக்கொள்ளாமல் அங்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அங்குள்ள கடலில் பலர் படகு பயணம் மேற்கொண்டிருந்தனர். 
 
அப்போது கிலாயூ எரிமலையில் இருந்து குழம்பும், உருகிய பாறையும் பறந்து வந்து படகு மீது விழுந்து தாக்கியது. இதனால் படகின் மேற்கூரை சேதமடைந்தது. 
 
மேலும் எரிமலை குழம்பு மற்றும் பாறைகள் தாக்கியதில் படகில் பயணம் செய்த 23 பேர் தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.