திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2020 (19:11 IST)

பூமியை நோக்கி வரும் விண்கல்.. மக்கள் பீதி

பூமிக்கு மிக நெருக்கமாக 4 கி.மீ. பருமன் கொண்ட ஒரு விண்கல், அடுத்த மாதம் கடக்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி, 4 கிலோ மீட்டர் பருமன் கொண்ட விண்கல் ஒன்று பூமிக்கு மிக நெருக்கமாக கடக்கவுள்ளதாக நாசா தெரிவுள்ளது.

எனினும் இந்த விண்கல் புவியின் ஈர்ப்புக்குள் சிக்காமல் கடந்து சென்று விடும் என்றும், பூமிக்கும் மனிதர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 31 ஆயிரத்து 320 கிலோ மீட்டர் வேகத்தில் பூமிக்கு நெருக்கமாக இந்த விண்கல் வந்து கொண்டிருப்பதாக கணிக்கப்படுகிறது.