அனாதையாக கிடந்த 16 லட்சம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: ஞாயிறு, 6 ஜூலை 2014 (18:12 IST)
துபாயில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பெண் ஊழியராக பணியாற்றி வரும் தஸ்லீமா ஹசன் அலி அனாதையாக கிடந்த 16 லட்சம் ரூபாயை போலீசில் ஒப்படைத்துள்ளார்.
தஸ்லீமா ஹசன் அலி கடந்த வாரம் வழக்கம் போல் ஒரு கழிவறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, அங்கு கேட்பாரற்று ஒரு பை அனாதையாக கிடப்பதை கண்டார். அந்த பையை எடுத்து, திறந்து பார்த்தபோது உள்ளே கட்டுக் கட்டாக ஒரு லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 16 லட்சம் ரூபாய்) நோட்டுகள் கிடந்தன.

உடனடியாக அந்த பையுடன் ஷாப்பிங் மாலை விட்டு வெளியே வந்த தஸ்லீமா அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மிகக் குறைந்த சம்பளத்தில், மற்றவர்கள் அறுவறுப்படையும் வேலையை செய்து வந்த போதிலும், இவ்வளவு பெரிய தொகையை கண்ட பின்னரும், மனதின் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமலும், கடமை தவறாமலும் அதை போலீசில் ஒப்படைத்த தஸ்லீமாவின் நேர்மையை துபாய் போலீசார் பாராட்டியதாக உள்ளூர் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :