திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:41 IST)

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: கோத்தபய ராஜபக்சே

kothapaya
இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என கோத்தபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். 
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்பதும் அதனால் மக்கள் கொந்தளித்து போராட்டம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இதனை அடுத்து ஊரடங்கு, எமர்ஜென்சி மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி  வருகின்றனர்
 
ஆனால் இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என எனவும் பெரும்பான்மையை யார் நிரூபித்தாலும் ஆட்சியை ஒப்படைக்க தயார் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்