வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:19 IST)

ஐநா சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபிஅன்னன் காலமானார்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார். அவருடைய மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
பத்து ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பணியில் இருந்த கோபி அன்னன் அவர்களின் சேவையை பாராட்டி அவருக்கு 2001ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
கோபி அன்னன் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தார் என்பதும், இவர் பதவியில் இருந்த காலத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.