Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிறந்த அடுத்த நொடியில் குழந்தை செய்த செயல் - நெகிழ்ச்சி வீடியோ


Murugan| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (13:12 IST)
பிறந்த சில நொடுகளில் தாயிடம் நெருக்கம் காட்டிய குழந்தையின் நெகிழ்ச்சி வீடியோ உலகெங்கும் வைரலாக பரவி வருகிறது.

 

 
பிரேசில் நாட்டில் வசிக்கும் பிரெண்டா என்ற பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி அறுவை சிகிச்சை முறைப்படி ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்கள், தாயிடம் அந்த குழந்தையை முதல்முறையாக காட்டினர். 
 
அப்போது, அந்த குழந்தை தனது பிஞ்சு கரங்களால் தாயின் முகத்தை அணைத்துக்கொண்டது. அதோடு, அதை விடுவிக்க மருத்துவர்கள் முயன்றும் தாயிடம் இருப்பதையே விரும்புவது போல அந்த குழந்தை தனது கரங்களை எடுக்க மறுத்து அழுது கொண்டே இருந்தது.
 
இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது என அக்குழந்தையின் தாயார் பிரெண்டா கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற பாசப்பிணைப்பை நாங்கள் இதுவரை கண்டதில்லை என அந்த மருத்துவர்களும் கூறியுள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :