வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (18:22 IST)

’முகமது மோர்சிக்கு’ வழங்கிய தீர்ப்பு நீதியை சீர்குலைக்கிறது - பாப்புலர் ஃப்ரண்ட் கருத்து!

முன்னாள் எகிப்திய ஜனாதிபதி முகமது மோர்சிக்கு எகிப்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் கே.எம். ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் எகிப்திய ஜனாதிபதி முகமது மோர்சி மற்றும் 19 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எகிப்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் கே.எம். ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் கே.எம். ஷெரிப் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "சமீபத்திய இந்த தீர்ப்பும் இதற்கு முன் இதுபோன்று வெகுஜன மரண தண்டனை வழங்கிய மற்றொரு தீர்ப்பும் எகிப்திய நீதித்துறையை அதன் ராணுவ ஆட்சியாளர்கள் சீர்குலைப்பதாக உள்ளது" என கூறினார்.
 
எகிப்து நாட்டில் முதன்முறையாக ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியை - நவீன வரலாற்றில் யாரும் கண்டிராத மிகவும் துரோகமான முறையில் அந்நாட்டு ராணுவம் பல வாலிபர்களின் உயிர்களை கொன்று ஆட்சியை கவிழ்த்தியது. இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
தற்போதைய ராணுவ ஆட்சியில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புவதற்கு கடினமாக உள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International எகிப்தில் நடக்கும் விசாரணையை 'வெட்க கேடு' என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் எகிப்திய ஆதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியில் இருந்ததை விட இப்போதுள்ள நிலை மிகவும் மோசமாக உள்ளது. மனித உரிமை மீறல்கள், மதம் மற்றும் அரசியல் சுதந்திரம் இல்லாத ஒரு குழப்பமான சூழலே உருவாகியுள்ளது.
 
எகிப்திய மக்கள் கொடுங்கோன்மையான மேற்கத்திய படைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி தங்களது விடுதலையையும் ஜனவரி 25 புரட்சியின் கொள்கைகளையும் மீண்டும் பெறுவார்கள் என கே. எம். ஷெரிப் நம்பிக்கை தெரிவித்தார். அவர்களின் போராட்டத்துக்கு சர்வதேச சமூகம் உதவியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.