செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (10:39 IST)

டெல்டாவையும் எதிர்த்து போராடும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி !

டெல்டா வகை கொரோனாவையும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி எதிர்க்கும் என அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி சமீபத்தில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது.
 
மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலையில் இந்த தடுப்பூசி ஒரே டோசில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது நிறுவன தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவையும் எதிர்க்கும் திறனுடையது என ஜான்சன் அண்ட் ஜான்சன் அறிவித்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசியே வீரியத்துடன் செயல்படுவதாக தனது 8 மாத ஆய்வறிக்கையை அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.