1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (07:04 IST)

இன்னும் சிலமணி நேரத்தில் அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்பு: நாடு முழுவதும் விழாக்கோலம்!

இன்னும் சிலமணி நேரத்தில் அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்பு
அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று இன்னும் சிலமணி நேரத்தில் பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
 
அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று அதாவது ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதேபோல் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்களால் எந்தவித அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பதவியேற்பு விழாவுக்கு குறைவான உலக தலைவர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.