திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 நவம்பர் 2022 (09:55 IST)

ட்விட்டரை வாங்குனத விட இதான் ஷாக்கா இருக்கு!? – ஜோ பைடன் விமர்சனம்!

பிரபல ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் மேற்கொண்டு வரும் மாற்றங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பில்லியனரான எலான் மஸ்க் வாங்கியது முதலாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய எலான் மஸ்க், பின்னர் ட்விட்டர் ஆலோசனை குழுவையும் கலைத்தார்.

அடுத்ததாக ப்ளூ டிக் சலுகையை பெற கட்டணம் நிர்ணயித்ததுடன், ட்விட்டர் வார்த்தை வரம்புகளையும் அதிகரித்துள்ளார். எலான் மஸ்க்கின் நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் எலான் மஸ்க்கின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “பொய்களை பரப்புவதற்காகதான் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார். அவர் ட்விட்டரை வாங்கியதை விட அதற்கு பிறகு எடுத்து வரும் நடவடிக்கைகள்தான் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது” என கூறியுள்ளார்.

Edited By Prasanth.K