வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (16:22 IST)

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் ஸின்ஜோ அபே நடவடிக்கை

ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தை அந்நாட்டு பிரதமர் ஸின்ஜோ அபே கலைத்தார்.
 
ஜப்பானில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த ஸின்ஜோ அபே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
 
இவரது பதவிக்காலம் 2016 வரை உள்ள நிலையில், மக்களிடையே அவரது செல்வாக்கு தற்போது சரிந்து வரும் நிலையில், பிரதமரின் செயல்பாடு குறித்து சமீபத்தில் அங்கு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
 
அப்போது பிரதமர் அபேயின் பொருளாதாரக் கொள்கைகள் தோல்வியடைந்து விட்டதாக 3 இல் ஒரு பங்கு பேர் கருத்து தெரிவித்து இருந்தனர். அவருக்கு ஆதரவாக 39 சதவீதத்தினர் மட்டுமே கருத்து தெரிவித்தனர். 
 
இந்நிலையில்,  தனது செல்வாக்கு மேலும் சரிவடைவதை பிரதமர் அபே விரும்பவில்லை. மேலும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் தற்போது பலமிழந்து காணப்படுகிறது.
 
எனவே இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்தி ஆட்சியை பிடிக்க பிரதமர் ஸின்ஜோ அபே எண்ணியுள்ளார். எனவே முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நாடாளுமன்றத்தை பிரதமர் அபே கலைத்தார்.
 
இது தொடர்பான பிரகடனத்தை நாடாளுமன்ற சபாநாயகர் அவையில் வாசித்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அங்கு டிசம்பர் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.