வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (11:33 IST)

ஏவுகணை ஏவப்பட்ட 10 வது நிமிடத்தில் ஜப்பானுக்கு ஆபத்து!!

அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 


 
 
இந்நிலையில் ஐப்பான் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு வலைத்தளத்தில் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் என்ன செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கு காரணம் வடகொரிய ஏவுகணை சோதனை மேற்கொண்ட போது எல்லாம் அது ஜப்பான் பகுதியில் வந்து விழுந்ததாலும் ஏவுகணை பறந்து வருவதற்கு எடுத்துக் கொண்ட நேரம் பத்து நிமிடம் ஆகும். 
 
இதனால் ஜப்பான் மக்கள் கதிகலங்கி போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.