ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?
பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தனது புதிய 'ஜமாத் உல்-மும்மினாத்' மகளிர் படைக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. 'துஃபத் அல்-மும்மினாத்' எனப்படும் இந்த ஆன்லைன் வகுப்பு நவம்பர் 8 முதல் தொடங்கவுள்ளது.
மசூத் அஸ்ஹர் மற்றும் தளபதிகளின் பெண் குடும்ப உறுப்பினர்கள், பெண்களுக்கு 'ஜிஹாத்' குறித்த கடமைகளைக் கற்பிக்க உள்ளனர். அஸ்ஹரின் சகோதரிகளான சாடியா அஸ்ஹர் மற்றும் சமைரா அஸ்ஹர் ஆகியோர் தினமும் 40 நிமிடங்கள் வகுப்புகளை நடத்துவார்கள். இதில் சேர ஒருவருக்கு 500 பாகிஸ்தான் ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் சமூக கட்டுப்பாடுகளை பயன்படுத்தி, தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பாணியில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய ஜெய்ஷ்-இ-முகமது ஆன்லைன் தளத்தை பயன்படுத்துகிறது.
Edited by Siva